வீணாகும் குடிநீர்

Update: 2025-12-28 07:13 GMT

வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட தேமானூரில் இருந்து சிதறால் செல்லும் சாலையில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மேல் பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்