ராசிபுரம் பழைய பஸ் நிலைய பகுதியிலிருந்து நாமக்கல் ரோடு, மாரியம்மன் கோவில், எல்.ஐ.சி. ஆபீஸ் வரை உள்ள ரோடு மீது தார்சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஆங்காங்கே வேகத்தடை ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. தார் சாலை மேம்படுத்தப்பட்டதன் காரணமாக வேகத்தடை இருப்பது இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. எனவே வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ணம் பூச வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பதை கண்டறிந்து விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.