கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் பிரிவு சாலை எதிரே உப்புப்பாளையம் செல்லும் மண்சாலை உள்ளது. இந்த மண்சாலை வழியாக அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்கும், வெளியூர்களுக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.