‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-12-21 16:19 GMT

கரூர் மாவட்டம் பூலாம்பாளையம் ஊராட்சி ஒன்றியம், ஏ.கே. சாலை பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், மண்சாலையாகவும் உள்ளது. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலையில் நடந்து செல்வதற்கே பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்