பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரைக்கு செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பெரியகுளம்-கும்பக்கரை சாலையை சீரமைக்க வேண்டும்.