விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் இருந்து தாதம்பட்டி செல்லும் தார்ச்சாலை முற்றிலும் சேதமடைந்து நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இந்த சாலையால் சில வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?