கீழப்பாவூர் யூனியன் அரியப்பபுரம் ஊராட்சி 7-வது வார்டு ரகுமானியபுரம் மெயின் ரோட்டில் ராட்சத பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. அதில் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அந்த பள்ளத்தில் கம்பு ஊன்றி சிவப்பு துணி கட்டி வைத்துள்ளனர். ஆகவே சாலையில் உள்ள ராட்சத பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.