கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடந்து வந்த பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தன. அந்த வகையில் பேரண்டப்பள்ளி, கோபசந்திரம் பகுதிகளில் பால பணிகள் நடப்பதால் அதிகமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. விபத்துகளும் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக வராமல், உத்தனப்பள்ளி, சூளகிரி வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே பேரண்டப்பள்ளி, கோபசந்திரம் பகுதிகளில் பால பணிகளை முடிக்கவும், விபத்துகளை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.