சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-12-21 13:21 GMT

அரியலூர் மாவட்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள கங்கவடங்கநல்லூரில் இருந்து காட்டுக்கொல்லை மெயின் ரோடு வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி மேடு, பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழேவிழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்