கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை அங்கண்ணன் வீதியில் பாதாள சாக்கடையை சீரமைக்க சாலை தோண்டப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியும் இதுவரை தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கவில்லை. அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.