கோவை சாய்பாபாகாலனி மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அந்த சாலைகள் பழுதாகி குண்டும், குழியுமாக கிடக்கின்றன. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது. அப்ேபாது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். அத்துடன் போக்குவரத்து நெரிசலும் அதிகளவில் உள்ளது. அந்த பகுதியை கடக்கவே மணிக்கணக்கில் ஆகிறது. இதனால் நேர விரயம், எரிபொருள் செலவு ஆகிறது. இதை சரி செய்ய சர்வீஸ் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.