சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.