சுகாதார சீர்கேடு

Update: 2025-12-21 10:18 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சருகனி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அச்சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே  மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வுகாண வேண்டும்.


மேலும் செய்திகள்