வடசேரியில் காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு மாநக பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வந்து காய்கறி பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தைக்கு வடசேரியின் பிரதான சாலையில் இருந்து செல்லும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே, சேதமடைந்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெக்ஸ், மேலப்பெருவிளை.