திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்குள் டவுன் பஸ்கள் செல்லும் நுழைவு வாயிலின் அருகே சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் பஸ் பள்ளத்தில் இறங்கி ஏறும்போது பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.