சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில்- திருச்சி செல்லும் சாலை ஆக்கிரமிப்பால் மிகவும் குறுகியதாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.