விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலூகா, சடையம்பட்டி கிராமத்தில் சாலை சேதமடைந்து நீண்ட நாட்களாக குண்டும் குழிமாக உள்ளது. இதனால் மழை பெய்யும் காலங்களில் மழைநீர் பள்ளத்தில் தேங்கி கிடப்பதுடன் இதில் கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியினருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா?