பழனி நகராட்சி 26-வது வார்டு பாரதிதாசன் சாலை இருபுறமும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. அங்குள்ள கடைகளுக்கு வருபவர்களும் சாலையை ஆக்கிரமித்து மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சாலை சுருங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும்.