கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2025-12-14 14:11 GMT

மானூர் அருகே உக்கிரன்கோட்டை பெத்தேல் நகர் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் தற்போது வரை எந்த வேலையும் நடைபெறவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்