சென்னம்பட்டியில் இருந்து ஜர்த்தல் செல்லும் மண் சாலை கடந்த பல ஆண்டுகளாக மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மண் சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?