இருண்டு கிடக்கும் மேம்பாலம்

Update: 2025-12-14 13:25 GMT

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பென்னாகரம் மெயின் ரோடு ரெயில்வே மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் பிரதான சாலையாக உள்ள இந்த மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் காலாவதியாகி எரியாமல் உள்ளது. ஒரு சில விளக்குகள் மற்றும் குறைவான வெளிச்சத்தில் எரிகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த மேம்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள அனைத்து மின்விளக்குகளும் முறையாக பராமரித்து எரிவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்