சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

Update: 2025-12-14 12:38 GMT

கரூர் பழைய பஸ் நிலையம் பின்புறம் அண்ணா சாலை உள்ளது. உள்ளூர் பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்களும், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் பழைய பஸ் நிலையத்துக்குள் வந்து இந்த சாலை வழியாகத் தான் வெளியே செல்லும். இந்நிலையில் அண்ணா சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்