சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2025-12-14 11:40 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அய்யம்பாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து ஊர்களான நடுப்பாளையம், சக்கரப்பாளையம் பகுதிகளில் முழுவதுமாக சாலை போடப்பட்ட நிலையில், அய்யம்பாளையம் பகுதியில் குறுகிய அளவில் மட்டுமே சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலைப் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது. எனவே அய்யம்பாளையம் பகுதியில் முழுவதுமாக சாலை அமைத்து விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்