தார்சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-12-14 11:38 GMT

கரூர் மாவட்டம் நொய்யல்-வேலாயுதம்பாளையம் சாலையில் மரவாபாளையம் அருகே அண்ணா நகருக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலை போடப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் முற்றிலும் சிதிலமடைந்து கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்