கூடலூர் தொரப்பள்ளி முதல் நடுவட்டம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள், சரக்கு வாகன டிரைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு குறிப்பிட்ட தூரத்துக்கு சாலையை சீரமைக்க பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி கூட முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.