சாலை வசதி வேண்டும்

Update: 2025-12-14 09:58 GMT

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 5-வது வார்டில் விரிவுபடுத்தப்பட்ட அய்யாசாமி கோவில் வீதியில் தெருவிளக்கு மற்றும் சாலை வசதி இல்லை. இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடப்பதால் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அத்துடன் சாலை வசதியும் இல்லாததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்கு சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏ்றபடுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்