சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருவதோடு விபத்திலும் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.