கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில் இருந்து ஹவுசிங் யூனிட் செல்லும் வழியில் பாலம் இறங்கும் பகுதியில் வளைவு இருக்கிறது. அங்கு பாலத்தில் இருந்து வாகனங்கள் வேகமாக வருகின்றன. ஆனால் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அங்கு விபத்துகள் அதிகமாக நடக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே பாலம் இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.