திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், பெரிய களக்காட்டூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம், நூலகம் மற்றும் ரேஷன் கடை போன்றவற்றிக்கு செல்லும் பிரதான சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடப்பதால் பொதுமக்களால் அந்த சாலையை முறையாக பயன்படுத்த முடியவில்லை. இதனால் ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதிவாசிகளின் நெடுநாள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.