கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட் அருகே வி.பாளையம் ஊராட்சியில் தந்தை பெரியார் நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள மண் சாலையானது சிறுமழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு புதிதாக தார் சாலை அமைத்துத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.