மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கன்னி கூட்டுரோடு- ஈருடையாம்பட்டு செல்லும் சாலை பலத்த சேதமடைந்துள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.