மதுரை கொட்டாம்பட்டி யூனியனில் உள்ள தும்பைப்பட்டி, அம்பலகாரன்பட்டியில் வார்டு எண்.1-ல் தார்ச்சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அச்சாலையை பயன்படுத்தும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.