விபத்து ஏற்படுத்தும் பாலம்

Update: 2025-12-07 16:11 GMT
சேரன்மாதேவி பேரூராட்சி 7-வது வார்டு கீழ முதல் தெருவில் ஓடை மீது கட்டிய பாலத்தின் இருபுறமும் கான்கிரீட் சாலை அமைக்காமல் மண் கொட்டி சீரமைத்தனர். தற்போது பெய்த மழையில் மண் கரைந்ததால் பாலத்தின் இருபுறமும் பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமப்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே பாலத்தின் இருபுறமும் கான்கிரீட் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்