பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியில் இருந்து தட்டான்குளம் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு பணிகள் முடிந்தும் பள்ளம் முறையாக மூடப்படவில்லை. மேலும் தார்சாலையும் அமைக்கப்படவில்லை. இதனால் சாலை தற்போது மண்பாதை போல் மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.