சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-12-07 13:54 GMT

புதுக்கோட்டை நகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள மூன்றாவது வீதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தவுடன் பள்ளங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்