கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் சாலை அமைக்கப்பட்ட போது கீழ்குப்பம் பஸ் நிலையத்தின் முன்பு சாலையில் 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் உள்பட பல உள்ளன. இந்த பகுதியில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கிறார்கள். எனவே வேகத்தடைக்கு வர்ணம் தீட்டி, இரவில் ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.