கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. உழுத வயல் போல காணப்படும் அந்த சாலையில் செல்லும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்கவும், மழைநீர் தேங்காமல் தடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.