கோவையை அடுத்த வெள்ளக்கிணறு-சமத்துவபுரம் சாலையில் அம்மாசைகவுண்டர் வீதியில் பல இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.