குண்டும் குழியுமான சாலை

Update: 2025-12-07 06:32 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் லலிதாஞ்சலி நகர், 1-வது பிரதான சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த சாலை மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத அவல நிலையும் நீடிக்கிறது. எனவே இதுதொடர்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்