புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியில் இருந்து வடகாடு செல்லும் இணைப்பு சாலையோரம் ஏராளமான செடி, கொடிகள், கருவேல மரங்கள் முளைத்து சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் ஒதுங்கி செல்லும்போது அவர்களின் கண்களில் கருவேல மர முட்கள் குத்தி காயம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.