துடியலூர் ரெயில் கேட் அருகில் உள்ள சாலைகள் ஆங்காங்கே உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த குழிகளில் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகிறது. இதனால் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அங்குள்ள பழுதாகி கிடக்கும் சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.