கடலூர் எஸ்.என்.சாவடி- இம்பீரியல் ரோடு இணைப்பு சாலையானது குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்லவே முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலையை விரைந்து சாி செய்ய வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.