திண்டிவனம்- செஞ்சி செல்லும் சாலையில் சந்தைமேடு பகுதிவரை சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகனஓட்டிகளின் நலன்கருதி சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.