திருச்செங்கோடு நாராயணபாளையம் ஜே.ஜே. நகர் முதல் ஆத்துராம்பாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை உள்ளது. இந்த சாலை தற்போது மிகவும் சேதமடைந்து பல்லாங்குழிகளாக காட்சி அளிக்கிறது. இதனால் தினசரி இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பள்ளி கல்லூரி, மாணவ-மாணவிகள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி புதிதாக சாலை அமைத்து தர அதிகாரிகள் முன் வருவார்களா?.