உத்தமபாளையம் நகரில் குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இதனால் தேரடி சாலை, எல்.எப். சாலை ஆகியவை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துடன் அந்த பகுதிகளை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை தேவை.