திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி ஜே.பி. எஸ்டேட் பகுதியின் 4-வது குறுக்கு தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த தெருவில் சாலை இல்லாததால் மழைக்காலங்களில் மழை நீர் மண் சாலைகளில் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.