பாதசாரிகள் சிரமம்

Update: 2025-11-23 13:18 GMT

சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் யானை கவுனி பாலத்தை தினமும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பாலம் தற்போது கயவர்களின் கூடாரமாக மாறியுள்ளது. குறிப்பாக, மது பிரியர்கள் மது குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கிறார்கள். இதனால் நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் இதை தடுக்கவும் அந்த பகுதியை தூய்மைபடுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்