புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கணக்கன்காடு ஊராட்சியை சேர்ந்த வெட்டன்விடுதி கிராமம் உள்ளது. இங்குள்ள வார சந்தை திடலில் இருந்து கள்ளர் தெரு வழியாக ஆதிதிராவிடர் தெருவுக்கு செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது. அங்காங்கே பள்ளம், படுகுழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறுவதால் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.