நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான்செட்டி தெருவில் மழைநீர் வடிகால் இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் குளம் போல தேங்குகிறது. மழை நீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.