ஆமை வேகத்தில் சாலை சீரமைப்பு பணி

Update: 2025-11-23 12:40 GMT

குடவாசல் ஓகை ஆசிரியர் நகரில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல வாரங்கள் ஆகியும் தற்போது வரை சாலை பணி முழுமை அடையாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடந்து வரும் சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்